‘மீண்டும் ஒரு காதல் கதை’க்காக இஸ்லாமிய திருமண சடங்கு பாடல்

225

meendum oru kadhal kathai 1

மலையாளத்தில் 2012ல் தேசியவிருதுகளை பெற்ற, இளைஞர்களை கிறங்கடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘தட்டத்தின் மறயத்து’ படத்தைத்தான் தற்போது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர். தனுஷ் படங்களைத்தான் இயக்குவாரோ என நினைக்கத்தூண்டும் வகையில் வரிசையாக தனுஷ் நடித்த படங்களாக இயக்கிய இவர் இந்தமுறை கௌதம் என்கிற அறிமுக கதாநாயகனை வைத்து படத்தை இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் இதன் ஒரிஜினலில் நடித்த இஷா தல்வார்தான் தமிழிலும் நாயகியாக நடிக்கிறார். நடுத்தர வர்க்கத்து இந்துப்பையன் வசதியான முஸ்லிம் பெண் இருவருக்கிடையே அரும்பும் காதல், இருவரும் ஒன்று சேர வரும் எதிர்ப்புகள், தடைகள் பற்றியது தான் இந்தப்படத்தின் கதை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ போல, ஆனால் வேறு மாதிரியான இந்து-முஸ்லீம் காதல் கதை தான் இது.

நாசர், மனோஜ் கே.ஜெயன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 51வது படமாகும். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மை போட்டு’ என்கிற பாடலை நேற்று வெளியிட்டுள்ளார்கள். இஸ்லாமிய திருமணச்சடங்குகளில் பாடப்படும் வகையில் இந்தப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.