புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அடுத்த டிஜிட்டல் அதிரடி ‘மாட்டுக்கார வேலன்’..!

270

maattukkara velan 1

1970-ல், ப.நீலகண்டன் இயக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்து வெள்ளிவிழா கண்ட படம் தான் ‘மாட்டுக்கார வேலன்’. கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலி இருவரும் இணைந்து பாடல் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட இந்தப்படத்தில் ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மாட்டுக்கார வேலன் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் ‘திரை இசைத்திலகம்’ கே.வி.மகாதேவன். எம்.ஜி.ஆர் படங்கள் தொடர்ந்து டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸாகி புதிய படங்களுக்கு இணையாக வசூலை குவித்து வருவது நாம் அறிந்த விஷயம் தான்..

அந்தவகையில் கிட்டத்தட்ட 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்கோப் திரைப்படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த ‘மாட்டுக்கார வேலன்’…

1970ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்துடன் உருவாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் என்ற வரலாறு படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆன, மாட்டுக்கார வேலன், டிஜிட்டில் ரிலீசிலும் சாதனை படிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கனகசபை தயாரிப்பில் உருவான மாட்டுக்கார வேலன் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட் ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறார்..

Comments are closed.