பாடல் காட்சியை படமாக்க கடுங்குளிரில் காத்திருந்த ‘ரங்கா’ டீம்..!

229

ranga team

சிபிராஜ்-நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் படம் தான் ‘ரங்கா’.. அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஆக்சன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.. கடந்த ஒரு மாத காலமாக காஷ்மீரில் முகாமிட்டிருந்த இந்தப்படக்குழுவினர் தாமரை எழுதிய ‘என் கண்கள்’ என்கிற பாடலை படமாக்குவதற்காக 2௦ நாட்கள் காத்திருந்து படமாக்கியுள்ளனராம்..

காரணம் காஷ்மீரில் மைனஸ் இரண்டு டிகிரி அளவில் கடுங்குளிர் நிலவினாலும் பாடல் காட்சிக்காக இயக்குனர் வினோத் எதிர்பார்த்த பனிப்பொழிவு அவ்வளவு அதிகமாக விழவில்லை.. அதனால் மற்ற நாட்களில் சண்டைக்காட்சிகளை படமாக்கிய இயக்குனர் பாடலுக்கு தோதான பனிப்பொழிவு விழ ஆரம்பித்ததும் பாடல் காட்சியையும் அற்புதமாக படமாக்கியுள்ளாராம். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பாகிஸ்தான் பார்டரில் படமாக்க இருக்கிறார்களாம்.

Comments are closed.