ரசிகர்களும் படக்குழுவினரும் எதிர்பார்த்தபடி பரபரப்பாக எல்லாம் எதுவும் நிகழவில்லை. வேறென்ன பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டைத்தான் சொல்கிறோம்.. முன்னாள் காதலர்களான இவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் கழித்து நடிப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருப்பது உண்மைதான்.
ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவோ, நயன்தாராவோ தங்களது வருத்தங்களையோ, கோபங்களையோ வெளிக்காட்டுவது இல்லையாம். நன்றாக சிரித்துத்தான் பேசுகிறார்களாம். ஆனால் அதில் இருவருக்குமான பழைய நட்பு எதுவும் தென்படவில்லையாம். சக நடிகர்கள் எப்படி பேசிக்கொள்வார்களோ அதுபோலத்தான் இருவரும் நடந்துகொள்கிறார்கள் என்கிறார்கள் படக்குழுவினர்.
நயன்தாராவிடம் மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறீர்களே என கேட்டால் “அவர்கள் சொன்ன கதை, அதில் என் கேரக்டர் பிடித்திருக்கிறது. மேலும் நான் கேட்ட சம்பளத்தை கொடுக்க முன்வந்தார்கள்.. அவ்வளவுதான்” என ஒரே போடாக போட்டு கேள்வி கேட்பவர்களை வாயடைக்க வைத்துவிடுகிறாராம்.