டப்பிங் பேசும் வாய்ப்பை மறுத்த டாப்ஸி

132

எல்லா நடிகைகளுக்குமே தாங்களே தங்களது சொந்தக்குரலில் டப்பிங் பேசவேண்டும் என்பது ஆசையாகத்தான் இருக்கும். ஆனால் மொழி தெரியாதது, குரல்வளம் இல்லாதது என சில காரணங்களால் பெரும்பாலான் நடிகைகளுக்கு இரவல் குரல் தான்.

ஆனால் நடிகை டாப்ஸிக்கு தமிழில் டப்பிங் பேச வாய்ப்பு வந்தும், தான் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் அவற்றை மிஸ் பண்ணியிருக்கிறார் டாப்ஸி. ஆனால் டப்பிங் பேச வாய்ப்பு வந்தது வேறு ஒரு நடிகைக்கு குரல் கொடுக்கத்தானாம்.

டாப்ஸி தெலுங்கிலும் இந்தியிலும் தான் நடிக்கும் படங்களுக்கு தானே டப்பிங் பேசிவிடுவார். தமிழில் மட்டும்தான் இன்னும் டப்பிங் பேசவில்லை. தற்போது வேறு படத்துக்கு வாய்ப்பு வந்தும் அதை ஏன் மறுத்தார் டாப்ஸி?

“தமிழில் டப்பிங் பேச ஆசைதான். ஆனால் டப்பிங் என்பது மிகப்பெரிய பிராசஸ்…, மேலும் டப்பிங் பேசும்போது அதில் திருத்தங்கள் வேறு செய்யவேண்டி இருப்பதால் நிறைய நாட்கள் இழுக்கும்.. இப்போது இருக்கும் சூழ்நிலையில் அது சிரமம் என்பதால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்” என்கிறார் டாப்ஸி.

Leave A Reply

Your email address will not be published.