செப்-15ல் சேரன் பட ஆடியோ ரிலீஸ்

164

ட்ரீம் தியேட்டர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சேரன், அதன் மூலமாக தற்போது ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து, இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு தெலுங்கில் ‘ஏமிட்டோ ஏ மாயா’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

அதேபோல புதிதாக ஆடியோ நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துள்ள சேரன், அதற்கு ட்ரீம் சவுண்ட்ஸ் என பெயர் வைத்திருக்கிறார். இந்த நிறுவனம் முதலில் வெளியிடுவது சேரன் இயக்கியுள்ள ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் பாடல்களைத்தான். செப்டம்பர் 15ஆம் தேதி இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெறவிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.