தனது அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துவரும் ‘யட்சன்’ படத்தை தொடர்ந்து, கிருஷ்ணா அடுத்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘யாக்கை’ என தூய தமிழில் பெயரிடப்பட்டுள்ளது. ‘ஆண்மை தவறேல்’ என்ற படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
கிருஷ்ணாவின் ஜோடியாக நடிப்பவர் ஸ்வாதி. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தற்சமயம் ‘யட்சன்’ படத்திலும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருபவர் இவர்தான். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்குகிறது. இந்தப்படத்தைகிருஷ்ணாவின் தந்தையான ‘பட்டியல்’ சேகர் தயாரிக்கிறார்.
Comments are closed.