சொர்ணமால்யா ரிட்டர்ன்ஸ்

66

படபடவென தனது கலகலப்பான பேச்சால் தான் தொகுத்து வழங்கும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சம்பாதித்தவர் சொர்ணமால்யா. அதன்பின் வெள்ளித்திரையில் கதாநாயகியாக காலடி எடுத்துவைத்தவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தார் சொர்ணமால்யா. குறிப்பாக அலைபாயுதே, எங்கள் அண்ணா, மொழி ஆகிய படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

மொழி படத்துக்குப்பின் திரையுலகைவிட்டு சிலகாலம் காணாமல் போனவர் இப்போது ‘புலிவால்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ்சினிமாவில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய ‘சாப்பா குரிசு’ என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். பிரசன்னா, விமல், அனன்யா, இனியா, ஓவியா மற்றும் தம்பி ராமையா நடித்துள்ள இந்தப்படத்தை ஜி.மாரிமுத்து இயக்குகிறார்.

Leave A Reply

Your email address will not be published.