சினிமாவில் இருந்து ரிட்டையர் ஆனவர்கள் டிவியில் நடிக்க வருவது பழைய கதை. இப்போது டிவி தொகுப்பாளர்கள் ஹீரோவாகவோ, காமெடியானாகவோ அறிமுகமாவது புதியகதை. சந்தானம், சிவகார்த்திகேயனை அடுத்து டிவி தொகுப்பாளர் பாலாஜியும் சுட்ட கதை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
படத்தில் கதாநாயகியாக லஷ்மிபிரியா நடிக்கிறார். அவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயபிராகஷ், சாம்ஸ், ரின்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சுப்பு.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு ’யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.