நெகட்டிவ் ரோலில் தைரியமாக நடித்த லட்சுமி பிரியா..!

152

‘சுட்டகதை’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி பிரியா.. தற்போது மிஷ்கினின் உதவியாளர் இயக்கியுள்ள  ‘கள்ளபடம்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஹீரோயின் என்றாலும் வில்லத்தனம் மேலோங்கும் நெகட்டிவ் ரோல் தானாம் அது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்துவிட்ட நிலையில் தான் தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டாராம் லட்சுமி பிரியா.

“ஒரு ஹீரோயினுக்கு என்னென்ன தேவையோ அது எதுவுமே இல்லாத கேரக்டர் இது. சுட்ட கதைக்கு முன்னரே இந்தப்படத்தின் கதையை சொல்லி நடிக்க அழைத்தார் வடிவேல். என் முதல் படம் வெளியாகும் முன்பே என் மீது நம்பிக்கை வைத்து அழைத்த அவரின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்கிற லட்சுமி பிரியா அழாகான தமிழில் தடுமாற்றமின்றி கோர்வையாக பேசி ஆச்சர்யப்படுத்துகிறார்.

Comments are closed.