சண்முகபாண்டியனுக்கு ‘உத்தம நண்பன்’ ஆனார் கமல்..!

149

 

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.. அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா கதாநாயகிகளாக நடிக்க, ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா, ஒரு சிறிய இடைவெளிக்குப்ப்பின் இசையமைத்துள்ள படம் இது.

இந்தப்படம் வெளியாகவுள்ள ஏப்ரல்-2ஆம் தேதி தான், கமலின் ‘உத்தம வில்லன்’ படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கமல் படத்துடன் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகிறதே என்கிற செய்தி, படத்திற்கு விளம்பரமாக மாறி ப்ளஸ் பாயிண்ட் ஆனாலும், கமல் படத்துடன் வெளியாகும்போது அந்த பரபரப்பில் அடங்கிப்போய்விடும் அபாயமும் இல்லாமல் இல்லை.

ஆனால் சண்முக பாண்டியனை ரிலாக்ஸ் செய்யும் விதமாக தற்போது ‘உத்தம வில்லன்’ பட ரிலீஸ் தேதி ஏப்ரல்-1௦க்கு தள்ளிப்போய்விட்டது. அறிமுக நாயகன் முன் தனது விஸ்வரூபம் காட்டி பயப்படுத்தாமல் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கியதன் மூலம், கேப்டனுக்கு மட்டுமல்ல, அவரது மகனுக்கும் ‘உத்தம நண்பன்’ ஆகிவிட்டார் உலகநாயகன்.

Comments are closed.