நிச்சயம் எதிர்பாராத ட்விஸ்ட் தான் இது… ஆம்.. விஜய்யை வைத்து செல்வராகவன் படம் இயக்கப்போவதாக சமீபகாலமாக ஊடகங்களில் செய்தி அடிபட்டுக்கொண்டிருக்கும் வேளையில், திடீரென சூர்யா நடிக்கும் படத்தை அவர் இயக்கபோகிறார் என்கிற அறிவிப்பு, அதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், பின்னே அது ட்விஸ்ட் இல்லாமல் வேறென்ன..?
எப்போது இதற்கான பேச்சு ஆரம்பித்தது என்கிற சின்ன விஷயத்தை கூட கசிய விடாமல் ரகசியம் காத்த இந்த டீம் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.. இது சூர்யாவின் 36வது படம். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபுவும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும் இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள்.. மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விபரங்கள் எல்லாம் விரைவில்.
Comments are closed.