கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்த செய்தி அட்லி டைரக்சனில் விஜய் நடிக்கிறார் என்பதுதான். இன்று இது உண்மை தான் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா படத்தின் அறிவிப்பைப்போல இது மிகப்பெரிய ஆச்சர்யத்தை தரவில்லை என்றாலும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அளவில் விஜய் ரசிகர்களுக்கு சந்தோசம் தான்.
இந்தப்படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குனர் அட்லயும் ‘ஒன்ஸ் அகெய்ன் விஜய் அண்ணா” என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.. கடந்தமுறையை விட இந்த தடவை இன்னும் அதிகமாக ‘தெறி’க்க விடுவார்கள் என நம்பலாம்.
Comments are closed.