துணை குடியரசுத்தலைவருக்கு சூர்யா நன்றி..!

231

surya thanks vp

2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இப்படம் 4 மொழிகளில் வெளியாகி 4 மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஓடி வருகிறது. தெலுங்கில் கூட்டு குடும்ப கலாச்சாரம் இன்றும் இருந்து வருகிறது. அதனாலேயே தெலுங்கில் “ சின்னபாபு “ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சின்னபாபு படத்தை பார்த்த இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ட்விட்டரில் “ சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம். “ என்று பாராட்டியுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா “ நாட்டின் மிகப்பெரிய தலைவரான நீங்கள் படத்தை பார்த்து பாராட்டியுள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது “ என தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா. தியேட்டர் உரிமையாளர்கள் தொடங்கி அனைவரும் படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது

Comments are closed.