‘மெட்ராஸ் மேன்சன் வலைத்தொடருக்கு இசையமைக்கும் கிடாரி இசையமைப்பாளர்

207

tarbuka siva

ஒருவரின் சொந்த ஊருக்கும் மேலான சொர்க்கம் எதுவும் இல்லை. ஆனால் அவர்களது பிறந்த இடத்திலிருந்து ஒதுங்கி, அவர்களின் கனவுகளைத் தொடருவதற்காக அந்நிய தேசத்தில் தஞ்சம் புகும்போது, ​​அவர்களுக்கு ஆறுதல் மற்றும் புகலிடம் வழங்கும் ஒரு மையம் இருக்கும். அதுதான் மேன்சன்..இன்னும் அழகாக சொன்னால் ஆண்களின் சரணாலயம்.

இதை அடிப்படையாக வைத்து தான் ‘மெட்ராஸ் மேன்சன்’ என்கிற வலைத்தொடர் தயாராகி வருகிறது. அத்தியப்பன் சிவா இந்த தொடரை இயக்குகிறார். ஆதித்யா ஷிவ்பிங், வர்ஷிணி பாகல், சுப்பு, அத்துல் ரகுநாத் ஆகியோரோடு அலங்காரமாக சிறப்பு தோற்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், வையாபுரி, சென்றாயன் நடித்திருக்கிறார்கள். கிடாரி படம் மூலம் புகழ்பெற்ற டர்புகா சிவா இசையமைத்து, அந்தோணி தாசன் பாடிய இந்த தொடரின் தீம் பாடல் மிகப்பெரிய கவன ஈர்ப்பாக இருக்கும்.

“பல்வேறு கனவுகள் மற்றும் இலக்குகளை கொண்டுள்ள, சாதிக்க துடிக்கும் ஒரு இயக்குனர், ஒரு மீம் கிரியேட்டர், ஒரு மார்க்கெட்டிங் நிர்வாகி, ஒரு ரியல் எஸ்டேட் தரகர் மற்றும் பல கதாபாத்திரங்கள் இதில் இடம்பெறுகினறன். “.

இயக்குனர் அத்தியப்பன் சிவா கூறும்போது, “வாடகைக்கு வீடு தேடி அலுத்துப்போன பேச்சிலர்களுக்கு எப்போதும் கதவு திறந்து இருக்கும் ஒரே இடம் மேன்சன் தான். மெட்ராஸ் மேன்ஷனின் பிரதான பெருமை பட்டினி கிடந்தாலும் சினிமாவில் வெற்றிக்கு போராடும் மனிதன், ஒரு வருடத்திற்கு மேலாக வேலை தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பலவீனமான பொறியியல் பட்டதாரி, 40 வயதிலும் இன்னும் கற்பனைகளில் மிதந்து கொண்டிருக்கும் ஒருவர், மற்றும் கனவுகள் மற்றும் திறமைகளை கொண்ட கதாபாத்திரங்களை பற்றிய கதை என்பது தான். அந்த கனவுகளில் பெரும்பாலானவை வெற்றி பெறவில்லை, தங்களுக்கு என்ன வழங்கப்பட்டதோ அதற்கேற்ப வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை, இந்த மக்கள் கவலையை மகிழ்ச்சியாய் மாற்றிக் கொள்ளும் கதை. இது தான் மெட்ராஸ் மேன்சன் மாயாஜாலமாகும். இந்த 13-எபிசோடு வலைத் தொடரில் மேன்சன் உரிமையாளர் அருகில் உள்ள டீக்கடை நாயரிடம் அடிக்கும் கிண்டல்கள் என சில மைய கதாபாத்திரங்களும் உள்ளன” என்கிறார்

Comments are closed.