சீனுராமசாமி-யுவன்- வைரமுத்து ; மீண்டும் ஒரு மாயாஜாலம்..!

209

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி டைரக்சனில் தற்போது உருவாகிவரும் படம் ‘கண்ணே கலைமானே’.. தமிழ்நாட்டின் அழகான பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எப்பொழுதும் தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த, மிகச்சிறந்த பாடல்களை தன் முந்தைய படங்களில் நமக்கு பரிசாக வழங்கியவர். தர்மதுரையில் அப்படி ஒரு இனிய நிகழ்வை பாடல்களில் நிகழ்த்தி காட்டினார். அதற்கு காரணம் வைரமுத்துவின் வைர வரிகளும், யுவன்சங்கர் ராஜாவின் இசையும் தான்.

அதே கூட்டணிதான் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்கிறபோது இசையில், பாடல்களில் இன்னொரு மாயாஜாலம் நிகழப்போவது உறுதி. ஆம். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. நல்ல குழுவுடன் இணைந்து மிகச்சிறந்த இசை ஆல்பங்களை வழங்குவதற்காக நன்கு அறியப்பட்ட இந்த நிறுவனம், இசை ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது.

Comments are closed.