டயாலிஸிஸ் மெஷின் வாங்க சூர்யா ரூ.6 லட்சம் நன்கொடை

77

நடிகர் சூர்யா சினிமாவில் நடிப்பது, அதன்மூலம் பணம் சம்பாதிப்பது என்று மட்டுமே நின்றுவிடாமல் தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கி விடுகிறார். மேலும் தனது அகரம் பவுண்டேசன் மூலமாக பலபேருக்கு இலவசக்கல்வி, மருத்துவச்செலவு ஆகியவற்றை ஏற்று உதவிகள் செய்து வருகிறார்.

அந்தவகையில் இன்று கோவை சூலூரில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா, ஆர்.வி.எஸ் மருத்துவமனையில் புதிய டயாலிஸிஸ் மையத்தை திறந்து வைத்தார். டேங்கர் பவுண்டேசன் தொடங்கியிருக்கும் இந்த மையத்திற்கு புதிய டயாலிஸிஸ் மெஷின் ஒன்று வாங்குவதற்காக ரூ.6 லட்சம் நன்கொடையும் அளித்திருக்கிறார் சூர்யா.

Leave A Reply

Your email address will not be published.