நாணயம் படத்துக்குப் பிறகு சிபிராஜ் நீண்ட இடைவெளிவிட்டு நடிக்கும் படம் தான் ‘நாய்கள் ஜாக்கிரதை’. படத்திற்கு இப்படி பெயர் வைத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. இதில் கதாநாயகனுக்கு இணையான கேரக்டரில் பயிற்சி பெற்ற ராணுவ புலனாய்வு நாய் ஒன்றும் நடிக்கிறது. சிபிராஜுக்கு ஜோடியாக வெளுத்துக்கட்டு, கூத்து ஆகிய படங்களில் நடித்த அருந்ததி நடிக்கிறார்.
லீ, நாணயம் படங்களுக்கு பிறகு நல்ல கதை அமையாததால் நீண்ட இடை வெளிவிட்ட சிபிராஜ், இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கனவே நாணயம் படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தையும் டைரக்டு செய்கிறார். ‘சித்து +2’, ‘போடா போடி’ போன்ற படங்களுக்கு இசை அமைத்த தரண்குமார் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார்.
சிபிராஜ் நடித்த ‘லீ’ படத்தை தயாரித்த சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்தின் முதல் படப்பிடிப்பு இன்று கோவையில் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.