கடந்த பத்து வருடங்களாக தமிழ்சினிமாவில் ரசிகர்களை தனது காந்தக்குரலால் கட்டிப்போட்டிருக்கும் பின்னணிப் பாடகி சுசித்ராவுக்கு இன்று பிறந்த நாள்.. ரேடியோ ஜாக்கி, நிகழ்ச்சி தொகுப்பாளர், பின்னணிப்பாடகி என குறுகிய காலத்திலேயே திரையுலகில் மிகப்பெரிய உயரம் தொட்ட சுசித்ரா முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பவரும்கூட. இன்றும் ஒரு கல்லூரி மாணவி போலவே இளமையுடன் இருக்கும் சுசித்ரா, நொடிக்கு நொடி குரலை மாற்றி, ரசிகர்களைக் கிறங்கடிக்கும் வித்தை கைவரப்பெற்றவர். அவர் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் திரையுலகில் மேலும் பல சாதனைகளை தொடரவும் நமது Behind Frames அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.