ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்துள்ள ராஜாராணி படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதற்கு முன்னதாக சுதந்திர தின கொண்டாட்டமாக ராஜாராணி படத்தின் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட விதத்தை (Making of RajaRani Songs) விஜய் டி.வியில் நாளை(ஆக-15) காலை 9.30மணி முதல் 10.30மணி வரை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் கதைக்கருவே மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள தனித்தன்மை, அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் இவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் இந்த பாடல் படப்பிடிப்புக் காட்சிகளை வெளியிட, சுதந்திர தினம்தான் சரியான நாள் என துணிச்சலாக முடிவெடுத்துள்ளார்கள் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனர் அட்லீயும். ஆக, இந்த ஒருமணி நேரம் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.