பவர்ஸ்டார் கதிகலங்க வைக்கும் ‘நாலு பொண்ணு நாலு பசங்க’

164

எஸ்.எம்.ஆர். கிரியேஷன்ஸ் சார்பில் புதுச்சேரி ஆர்.பன்னீர் செல்வம் தயாரிக்கும் படம் ‘நாலு பொண்ணு நாலு பசங்க’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ். மேலும் ஷங்கர் என்பவருடன் இணைந்து படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார்.

இந்தப் படம் அப்பர்ட்மெண்டில் குடியிருக்கும் மக்களின் வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமாம் இந்தப் படத்தில் நான்கு கதாநாயகன், நான்கு கதாநாயகிகளாக புதுமுகங்கள் நடிக்க, இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் படத்திற்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சில தினக்களுக்கு முன்புதான் சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கி முதல் பாடல் சிடியை இயக்குனர் பி.வாசு வெளியிட, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.

1 Comment
  1. Meran Khan says

    Prozone is a modern digital platform designed to bring structure, reliability, and ease of use into one unified experience. It focuses on smooth performance and clear interaction, allowing users to explore features confidently. Prozone is built to support consistency, accessibility, and efficient engagement in today’s fast-paced digital environment.

Leave A Reply

Your email address will not be published.