வி.செங்கையா வழங்கும் ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் வேகமாக வளர்ந்து வருகிறது.தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “அலா மொதலைன் தி” படத்தின் தமிழ் பதிப்பான இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இதில் கெளதம் கார்த்திக்,ராகுல் பிரீத்சிங், நிக்கேஷா பட்டேல் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
காதலுக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த கதைக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.இவர் இசையில் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார்.இப்பொழுது “ஷேடப் யுவர் மவுத்” என்ற பாடலை ஸ்ருதிஹாசன் பாடினார்.மிடில் ஈஸ்டர்ன் எனப்படும் அரேபியன் ஸ்டைல் பாடலை தான் முதன்முதலாக பாடியதாக சுருதி பெருமைப்பட்டார். மதன் கார்கி எழுதியுள்ளார்.தீபன் சேர்ந்து பாடினார்.ப்ரிய தர்ஷன் உதவியாளர் ரவி தியாகராஜன் டைரக்ட் செய்கிறார்.
தயாரிப்பு: பி.ரவிக்குமார், பி.வி.பிரசாத்.