20கிலோ வெயிட் கூட்ட ஒன்றரை கோடி செலவு..?!

117

‘மகதீரா’, ‘நான் ஈ’ என முந்தைய ஹிட்டுக்களின் வெற்றிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தற்போது தெலுங்கில் ‘பாஹூபாலி’ என்ற சரித்திரப்படத்தை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார்.

இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரபாஸுக்கு பாஹுபாலி, சிவுடு என இரண்டு வேடங்கள். பாஹுபாலி கேரக்டருக்கு ஜோடியாகத்தான் தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இதில் ஒரு கேரக்டருக்காகத்தான் 20 கிலோ எடையை கூட்டியிருக்கிறார் பிரபாஸ்.

இதற்காக ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார் பிரபாஸ் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.. கடந்தமுறை அமெரிக்கா சென்றிருந்த பிரபாஸ் அங்கே WWF வீரர்கள் பயிற்சிபெறும் ஜிம்மையும் அங்குள்ள உபகரணங்களையும் பார்த்து பிரமித்துப் போவிட்டாராம்.

உடனே அங்கிருந்து அதேபோன்று உடற்பயிற்சி சாதனங்களை கப்பல் மூலம் தனது வீட்டிற்கு வரவழைத்தவர், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஜிம் ஒன்றை ஸ்பெஷலாக நிர்மாணித்திருக்கிறார். மகேஷ்பாபு, ஹ்ரித்திக் ரோஷன் போல வெளிநாட்டில் இருந்து பயிற்சியாளரை அழைத்து வந்து வைத்துக்கொள்ளாமல் உள்ளூர் பயிற்சியாளரை வைத்தே எடைகூட்டும் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மேலும் உணவு வகைகளிலும் கடுமையான மாற்றம் செய்திருக்கிறார்.

ஒரு தெலுங்கு நடிகர் 20கிலோ வரை தனது உடல் எடையை கூட்டியிருக்கிறார் என்றால் அது பிரபாஸ் தான் என்று ஆச்சர்யப்படுகிறார்கள் தெலுங்கு திரையுலகினர்.

Leave A Reply

Your email address will not be published.