ரஜினிக்கு அடுத்து விஜய்தான் இல்லை அஜித் தான்னு ஏதோ சூசகமா ஹாட் நியூஸ் சொல்ற மாதிரி தெரியுதே.. என்னவாக இருக்கும் என ஆளாளுக்கு ஒரு கற்பனை ஓட
ஆரம்பித்திருக்குமே.. நீங்கள் நினைப்பது மாதிரி எல்லாம் இடம் பிடிக்கும்போட்டி எதுவும் இல்லை..
‘சுப்ரமணியபுரம்’ படத்தில் சசியின் மீது ரசிகர்களுக்கு ஆரம்பித்த கிரேஸ் நாடோடிகள்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இன்னும் அதிகமாகியது. அதன்பின் திரையுலகில் எந்த விழாக்கள் நடந்தாலும் அதில் 75 சதவீதம் விழாக்களில் சசியும் தவறாமல் இடம்பெற்றிருப்பார்.
அதேபோல சசிகுமார் பேரை சொல்லி அழைக்கும்போதே கீழே இருந்து விசில் பறக்கும்.. பேச ஆரம்பிக்கும்போதும் அது தொடரும்.. அதாவது ‘செண்டர் ஆஃப் தி அட்ராக்ஷன்’ என்று சொல்வார்களே.. சசிகுமாருக்கு அது நன்றாகவே பொருந்தியது.
இப்போது அதே மாதிரியான பொஸிஷனுக்கு வந்திருக்கிறார் விஜய் சேதுபதி.. பல படங்களில் இடைவெளி இல்லாமல் நடித்துக்கொண்டு இருந்தாலும் தனக்கு நெருங்கியவர்கள் அழைக்கும்போது அந்த விழாக்களில் தவறாது கலந்துகொள்கிறார் விஜய்சேதுபதி..