ட்விட்டரில் சூரியின் பெயரால் ரஜினிக்கு அவதூறு

94

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’. இந்தப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினி ‘நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் பட வெற்றிக்கு என் வாழ்த்துகள்” என்று மனம் விட்டு பாராட்டி ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் வெளியிட்டார். இது செய்தியாகவும் பத்திரிக்கைகளின் விளம்பரத்திலும் இடம் பெற்றது.

இந்தக்கடிதம் நடிகர் சூரிக்கு தேவையில்லாத பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளது. எப்படி என்கிறீர்களா.. இந்தப்படம் பற்றி ட்விட்டரில், “ஒரு பிரபலம், ஒரு படம் ஆஹா ஓஹோன்னு இருக்குதுன்ன்னு சொன்னாரு அப்படிங்கிற்துக்காக அந்தப்படங்களை பார்க்காதீங்க.. சில பேரு மொக்கைப்படங்களுக்கு கூட நல்ல விமர்சனம் கொடுப்பாங்க” என குறிப்பிட்டிருக்கிறாராம்.

ரஜினி ‘இவன் வேற மாதிரி’ படத்திற்காக கொடுத்த பாராட்டுக் கடிதத்தைப் பற்றித்தான் சூரி இப்படி எழுதியிருக்கிறார் என சில பேர் அவர்மேல் அம்பு தொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் விசாரித்த்தில் சூரிக்கு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கணக்கே கிடையாது என்பதுடன் அதை ஆபரேட் செய்யவும் அவருக்கு தெரியாது.. அதற்கான நேரமும் அவருக்கு இல்லை.. அப்படியே இருந்தாலும் ரஜினியையோ மற்ற பிரபலங்களையோ தாக்குவதற்கு அவர் என்ன முட்டாளா? என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

இப்போதுதான் யார் வேண்டுமானாலும் யாருடைய பெயரிலும் போலி கணக்குகளை ஆரம்பித்துக்கொள்ள முடியுமே.. இதற்கு முன் எத்தனை பேருக்கு அப்படி பிரச்சனைகள் கிளம்பி, அவர்கள் தங்கள் ட்விட்டர் கணக்கையே மூடிய நிகழ்வெல்லாம் நடந்திருக்கிறது. சூரியின் வளர்ச்சியைப் பொறுக்காத யாரோ சில விஷமிகள் தான் இந்த சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.