ASA மல்டி மீடியா சார்பில் விக்டர் ராஜபாண்டியன் தயாரித்து வரும் படம் “இசை”. இதன் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
தற்பொழுது கொடைக்கானலில் படமாக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலின் மிக உயர்ந்த இடமான பாறைப்பட்டி என்ற இடத்தில் ஒரு பெரிய கிராமத்தையே உருவாக்கியிருக்கிறார்கள் ரோடு வசதி இல்லாத அந்த இடத்தில் நடந்து சென்று இவ்வளவு பெரிய கிராம செட்டை உருவக்கியிருப்பது அந்த ஊர் மக்களையே ஆச்சர்யபடுத்தியுள்ளது. 60-பேர் கொண்ட குழு, சுமார் 14-நாட்கள் மழையென்றும் பார்க்காமல் வேலை செய்து உருவாக்கியுள்ளார்கள். இங்கு 15-நாட்கள் படபிடிப்பு நடைபெறுகிறது.
“அதோ வானிலே நிலா போகுதே
எதை தேடி தேடி
அதை கேட்கலாம் துணையாகவே
என்னோடு வா நீ…”
என்று கார்கி எழுதிய பாடலை சின்மயி, கார்த்திக் பாடிய பாட்டும் படமானது.
இதில் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்திரி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்…
கதை – திரைக்கதை – வசனம் – இசை & டைரெக்ஷன்: எஸ்.ஜே.சூர்யா
ஒளிப்பதிவு: சௌந்தர்ராஜன் (மற்றான்)
“இசை” – வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளர் ஒருவருக்கும் மூத்த இசை அமைப்பாளர் ஒருவரக்கும் நடக்கும் மோதல்.