
கன்னடத்தில் தான் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ என்கிற சூப்பர்ஹிட்டை தொடர்ந்து மீண்டும் அதே கன்னடத்தில் கன்னட சூப்பர்ஸ்டாரான சிவராஜ்குமாரை வைத்து பி.வாசு இயக்கியுள்ள படம் தான் ‘சிவலிங்கா’.. வேதிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில், பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் கடந்த பிப்-12ஆம் தேதி கர்நாடகாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
தமிழ்சினிமா வி.ஐ.பிகளுக்காக இந்தப்படத்தின் பிரிமியர் காட்சியை சென்னையில் உள்ள போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் திரையிட்டு காட்டினார் பி.வாசு.. இதில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன், லிங்குசாமி, எஸ்.பி.ஜனநாதன், லாரன்ஸ், எம்.ராஜேஷ், கலைஞானம் மற்றும் டி.சிவா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு படத்தை பார்த்து ரசித்து, பி.வாசுவையும் அவரது மகனையும் பாராட்டினார்கள்.
Comments are closed.