ராஜஸ்தானில் படமாகும் வேலைக்காரன் பாடல்..!

239

velaikkaran song shooting-1

‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார் மோகன்ராஜா. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் சினேகா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படம் வரும் கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியாக இருக்கிறது,. இந்தநிலையில் இந்தப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை பிருந்தா மாஸ்டர் உதவியுடன் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் வைத்து படமாக்கி வருகிறார்கள். ஏற்கனவே இந்தப்படத்தின் வசனக்காட்சிகள் மற்றும் சில பாடல்களுக்கான படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகளும் நிறைவுபெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.