காதலுக்கு தடை விதிக்கும் ‘மரகதக்காடு’..!

217

maragatha kaadu

அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம் தான் ‘மரகதக்காடு’. ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படுவது சமூக தேவை என சொன்னாலும் அது உண்மையிலேயே காடுகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது பற்றி பேச வருகிறது ‘மரகதக்காடு’ படம். இது முழுக்க முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.

இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா, மற்றும் பலருடன் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன .

படம் முழுவதும் தமிழக, கேரள அடர்ந்த வனப்பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை, எந்த பிளாஸ்டிக் பொருளும் பயன்படுத்தப்படவில்லை. படத்தின் கதை எதை நோக்கி நகர்கிறது..?

நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான் . காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது அவனது காதல். அதேசமயம் காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது. இதனால் அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன? முடிவு என்ன? என்பதே கதை .

காதலுடன் காடு, மக்கள், அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள், அவர்களது வாழ்வியல், காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் இந்த கதையில் கையாளப்பட்டு இருக்கிறதாம்

Comments are closed.