ஒரு படம் ரிலீஸாகி இரண்டு வாரம் ஓடிவிட்டாலே மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டதாக பேசிக்கொள்ளும் இந்த அசாதாரணமான சூழலில் ஹரி டைரக்ஷனில் சூர்யா நடித்த சிங்கம்-2 வெற்றிகரமாக நூறாவது நாளை தொட்டுள்ளது. திருட்டு வி.சி.டி, இண்டெர்நெட் என சினிமாவை அழிக்க நினைக்கும் கொடிய அரக்கன்கள் சுற்றிக்கொண்டிருந்தாலும் அவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டுத்தான் இந்த சாதனையை செய்திருக்கிறது சிங்கம்-2.
ஒரு ரசிகனின் பல்ஸை சரியாக அறிந்திருக்கும் இயக்குனர் ஹரி தனது ஒவ்வொரு படத்திலும் அதை சரியாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படங்கள் எல்லாமே வெற்றியை, சொல்லி அடிக்கின்றன. அந்தவகையில் நூறாவது நாளை எட்ட உதவிய ரசிகர்களுக்கும் பத்திரிக்கை, மீடியா நண்பர்களுக்கும் சிங்கம்-2 படக்குழு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டிருக்கிறது.