அரவிந்த்சாமி படத்தில் லேட்டஸ்ட் வரவு சிம்ரன்..!

228

Simran-aravind swamy

மினிமம் கியாரண்டி ஹிட் படங்களுக்கென புகழ்பெற்றவர் இயக்குனர் செல்வா.. ஒரு இடைவெளிக்குப்பிறகு இவர் மீண்டும் களத்தில் குதித்து அரவிந்தசாமியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.. ஏற்கனவே அரவிந்த்சாமி, மம்முட்டி இருவரையும் வைத்து ‘புதையல்’ என்கிற படத்தை இயக்கியவர் தான் செல்வா.

இந்த புதிய படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடித்து வருகிறார்.. இந்த நிலையில் இந்தப்படத்தின் புதிய வரவாக சிம்ரன் நுழைந்துள்ளார். படத்தில் இவருக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார்..

இமான் இசையமைக்கும் இந்தப்படத்தில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, சாந்தினி, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ்கபூர், நாகிநீடு, ரமேஷ் பண்டிட், OAK.சுந்தர் என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். அதனால் இபோதே படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளதாம்.

முக்கியமான விஷயம், தற்போது சொல்லப்பட்டு வருவதுபோல இந்தப்படத்தின் டைட்டில் ‘வணங்காமுடி’ இல்லையாம்.. விரைவில் உண்மையான டைட்டில் பற்றிய அறிவிப்பு வெளியாகுமாம்.

Comments are closed.