
நாம் விளையாட்டு என்று நினைத்துப் பேசுவது மற்றவர்களுக்கும் அப்படி தெரியவேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லையே.. அப்படித்தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசிய வார்த்தைகளும் ஒரு சிறிய சலனத்தை கிளப்பிவிட்டுள்ளன.
இரு தின்ங்களுக்கு முன் விஜய் டிவி நேர்காணலில் தொகுப்பாளர் டிடி, சௌந்தர்யாவிடம் சிம்பு படத்தை காட்டி இவருக்கு என்ன சொல்ல இரும்புகிறீர்கள் என கேட்க, சௌந்தர்யாவும் சிம்பு தனது சிறுவயது நண்பர் என்பதால், “சிம்பு பாடாத.. நிறுத்திடு” என ஜாலியாகத்தான் சொன்னார்.
ஆனால் சிம்புவை ஆராதிக்கும், அவர் பாடினால் அதை தேவாரமாக ரசிக்கும் ரசிகர்களுக்கு இது கோபத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது. அதனால் சௌந்தர்யாவுக்கு எதிராக ட்விட்டர், ஃபேஸ்புக்குக்களில் தங்களது எதிர்ப்பை காட்டி கண்டனம் தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர்.
ஆனால் சிம்பு தனது ரசிகர்களிடம் ‘இந்த இஷயத்தை பெரிதாக்கவேண்டாம். சௌந்தர்யாவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட வேண்டாம். என்னைப்போலவே மற்றவர்களையும் மதியுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல சௌந்தர்யாவும், சிம்பு தனது சிறுவயது நண்பர் என்பதாலேயே அப்படி விளையாட்டாக கூறினேன்,. அதில் எந்த விமர்சன அர்த்தமும் இல்லை என்று சொல்லியுள்ளார். இதனால் தற்போது இந்த செய்தியின் தீவிரம் சற்றே தணிந்துள்ளது..
இப்போது முதல்வரியை மீண்டும் படியுங்கள்.
Comments are closed.