தனுஷின் படத்தை இயக்கும் கிருத்திகா உதயநிதி..!

231


‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்திருக்கும் கிருத்திகா உதயநிதி, தற்போது தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். சில குறும்படங்களை இயக்கிய அனுபவத்தை வைத்து மட்டுமே காதல் கலந்த காமெடி படமாக தனது முதல் படத்தை இயக்கிய கிருத்திகா, இந்தப்படத்தை ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக இயக்க உள்ளார்.

தனுஷ் கிருத்திகாவுக்கு நல்ல நண்பர். அவரிடம் பேச்சுவாக்கில் தனது புதிய படத்தின் கதையை கிருத்திகா சொல்ல, இந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டார் தனுஷ். இன்னும் படத்தின் நாயகன், நாயகி யாரென முடிவுசெய்யப்படவில்லை. ஆனால் இந்தப்படத்திற்கு தனுஷ், கிருத்திகா இருவருக்குமே ராசியான அனிருத் தான் இசையமைக்கிறார்.

 

 

Comments are closed.