சமீபத்தில் வெளியான் ‘கோச்சடையான்’ படத்தின் டீஸர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை ரொம்பவே கவர்ந்துவிட்டது. தன்னை எப்போதுமே ரஜினியின் ரசிகனாகவே காட்டிக்கொள்ள விரும்பும் ஷாருக்கான், சமீபத்தில் தான் நடித்திருந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் கூட ரஜினியை புகழ்ந்து ஆடிப்பாடுவது போல ஒரு பாடலை படத்தில் வைக்க சொல்லியிருந்தார்.
தற்போது கோச்சடையான் படத்தின் டீஸரைப் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் தளத்தில் “ரஜினியும், அவரது மகள் சௌந்தர்யாவும் இணைந்து இந்திய சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டுசெல்ல முயற்சித்திருக்கிறார்கள்” என பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப்படத்தில் ஷாருக்கானின் மனம் கவர்ந்த் ஹீரோயினான தீபிகா படுகோனும் நடித்திருப்பதால் இந்தப்படத்தை உன்னிப்பக கவனித்துவருகிறார் ஷாருக்கான்.