சூரியன் மேற்கே உதிப்பதற்கு சமமானது தற்போது நடந்திருக்கும் நிகழ்வு. ஆம் செல்வராகவன் டைரக்ஷனில் புதிய படத்தில் நடிக்கிறார் சிம்பு. உண்மையிலேயே மிக ஆச்சர்யமான கூட்டணி இது. சினிமாவில இரண்டு விஷயங்கள் நடக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஒன்று கௌதம் மேனன் படத்தில் தனுஷ் நடிப்பது.. இன்னொன்று செல்வராகவன் படத்தில் சிம்பு நடிப்பது.
இதோ இப்போது இரண்டாவது விஷயம் நடந்தே விட்டது. சினிமாவில் அதிசயங்கள் எப்போது நடக்குமென்று சொல்ல முடியாது. அது மாதிரித்தான் தற்போது உருவாகியுள்ள கூட்டணியும். இந்தப்படத்தை வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா தயாரிக்கிறது. பிப்ரவரியில் படப்பிடிப்பை துவக்க இருக்கிறார் செல்வராகவன்.