தங்களுக்கு தமிழ்சினிமாவில் ஒரு முகவரி தந்த இயக்குனர்கள் மீண்டும் தங்களது படங்களில் நடிக்க அழைக்கும்போது என்ன ஏது என்று காரணம்கூட கேட்காமல் ஓடிவந்து நடித்து கொடுக்கிறார்கள் சில நடிகர்கள். இதைத்தான் ‘குருபக்தி’ என்பார்கள்.
தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கிவருகிறார் தேசியவிருது பெற்ற பட இயக்குனரான சீனு ராமசாமி. இந்தப்படத்தில் இதேபோன்ற குருபக்தியைத்தான் சீனு இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ பட ஹீரோவான விஜய் சேதுபதியும் அடுத்து அவர் இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தின் ஹீரோவான விஷ்ணுவும் இணைந்து நடிப்பதன் மூலம் அவருக்கு காட்டி வருகிறார்கள். இந்தப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப்படத்தை முடித்ததும் சீனுராம்சாமி தனது அடுத்த படத்தை இயக்கப்போவது சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்குத்தான். இந்தப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகளே நடிக்க இருக்கிறார்கள். ஏப்ரல் மாதத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.