‘ஐ’ படத்தை முடித்துவிட்டு ஷங்கரின் அடுத்த படம் யாரை வைத்து பன்ணுகிறார் என்பதை விட, என்ன படம் பண்ணுகிறார் என்பதில்தான் விஷேசமே அடங்கியிருக்கிறது. இந்தமுறை ஃபேண்டஸி படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சரித்திரப் படங்களின் பக்கம் பார்வையைத் திருப்புகிறார் ஷங்கர்.
புராணக்கதைகளில் தனது மனம் கவர்ந்த கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து அவர் கதைகூட தயார் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அந்த வகையில் கர்ணன் கதாபாத்திரத்திற்கான சரியான நபரையும் அவர் டிக் செய்து வைத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
அது வேறு யாருமல்ல.. மெகா ஸ்டார் மம்முட்டியே தான். கர்ணன் கேரக்டருக்கு உயிர்கொடுக்க இப்போதிருக்கும் நடிகர்களில் மம்முட்டியைத் தவிர வேறு ஒருவராலும் முடியாது என்பது ஷங்கரின் எண்ணம். மலையாளத்தில் வெளியான ‘பழசிராஜா’வுக்கு உயிர்கொடுத்ததே ம்ம்முட்டியின் நடிப்புதானே.
அந்தவகையில் ம்ம்முட்டியும் இந்தப்படத்திற்கு மிகுந்த ஆவலுடன் சம்மதம் சொல்ல்விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது கிட்டத்தட்ட விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் ஷங்கர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஆரம்பமாகிவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. எப்படியும் ஏப்ரல்-14 தமிழ்ப்புத்தாண்டில் சம்மர் ஸ்பெஷலாக ‘ஐ’யை திரைக்கு கொண்டுவர தீர்மானித்திருக்கிறார் ஷங்கர்.