பழம்பெரும் பட நிறுவனமான சத்யா மூவீஸ் தனது 50-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் சொந்த பட நிறுவனமான சத்யா மூவீஸ் இதுவரை சுமார் 25 படங்கள் தயாரித்துள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்த 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்து இருந்தார். அவரைப் போலவே ரஜினிகாந்தும் 6 படங்களில் நடித்து இருக்கிறார். 2 படங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளார். ஆனாலும் இந்த நிறுவனத்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது என்றால் அது ரஜினி நடித்த பாட்ஷா’ படம் தான்.
தற்போது இந்த நிறுவனம் 5௦ ஆண்டுகள் கடந்துள்ளதையொட்டி, இந்த நிறுவனம் தயாரித்த எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி,’ ரஜினியின் ‘மூன்று முகம்,’ கமலின் ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை டிஜிட்டலில் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகின்றன

Comments are closed.