பிப்-16 ரிலீஸாகும் படங்கள் ; ஒரு பார்வை..!

260

feb 16 release

இந்த வாரம் நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகள், வீரா, மனுசனா நீ என மொத்தம் ஐந்து படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் பாலா டைரக்சனில் ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘நாச்சியார் தான் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படமாக இருக்கிறது.

அடுத்ததாக ஆரி, ஆஷ்னா ஜவேரி நடிப்பில் இயக்குனர் இசாக் இயக்கியுள்ள ‘நாகேஷ் திரையரங்கம்’ ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ளதால் அதுவும் ரசிகர்களின் கவனத்திற்கு ஆளாகியுள்ளது.

கிருஷ்ணா நடித்துள்ள வீரா படத்தின் கேரக்டர்கள் அனைத்துமே நெகடிவ் சாயலும் கொண்டவை என்கிற அறிவிப்பும் அந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது., ராஜாராமன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

இவைதவிர மேல்நாட்டு மருமகன், மனுசனா நீ ஆகிய சின்ன பட்ஜெட் படங்களும் போட்டியில் இருக்கின்றன.

Comments are closed.