’சத்திய சோதனை’ விமர்சனம்

73

நடிகர்கள் : பிரேம்ஜி, ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, சித்தன் மோகன், செல்வமுருகன், ஹரிதா, பாரதி
இசை : ரகுராம்.எம்
ஒளிப்பதிவு : ஆர்.வி.சரண்
இயக்கம் : சுரேஷ் சங்கையா
தயாரிப்பு : சூப்பர் டாக்கீஸ் – சமீர் பரத் ராம்

‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்பட இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், பிரேம் ஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சத்திய சோதனை’. காவல்துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றின் தவறான விசாரணை மூலம் நிரபராதிகள் எப்படி தண்டிக்கப்படுகிறார் என்பதை பற்றி பேசும் இந்த படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

நாயகன் பிரேம் ஜி தனது காதலியை பார்க்க செல்லும் போது வழியில் ஒருவர் வேட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த உடலை பார்க்கும் பிரேம்ஜி, அதில் இருக்கும் கைகடிகாரம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை எடுத்து காவல் நிலையத்தில் கொடுக்க செல்கிறார். அதே சமயம் வேறு ஒரு காவல் நிலையத்தில் சரணடையும் கொலையாளிகள், தாங்கள் கொலை செய்தவற் உடலில் ஏகப்பட்ட தங்க நகைகள் இருந்ததாக வாக்கு மூலம் கொடுக்கின்றனர். இதனால், பிரேம் ஜி மீது சந்தேகப்படும் காவல்துறை, அவரை என்ன செய்தார்கள்?, கொலை செய்யப்பட்டவரின் அணிந்திருந்த தங்க நகைகள் என்ன ஆனது? என்பதை சொல்வது தான் ‘சத்திய சோதனை’ படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கும் பிரேம் ஜி, நாயகனாக காதல் டூயட் பாடுவது மட்டும் இன்றி கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து பாராட்டும் பெறுகிறார். இவரது காதலியாக நடித்திருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கு குறைவான வேலை தான் என்றாலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

சித்தன் மோகன் மற்றும் செல்வ மோகன் இருவரும் படம் முழுவதும் வருவதோடு, படம் முழுவதும் தங்களது நடிப்பு மற்றும் இயல்பு மாறாத பேச்சால் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார்கள். ஹரிதா, ரேஷ்மா, பாரதி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்கள்.

ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு தயாரிப்பாளரின் பட்ஜெட்டுக்கு ஏற்றபடியும், கதைக்கு ஏற்றபடியும் பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இரண்டு மணி நேரம் எப்படி போனது, என்பதே தெரியாதவறு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகரும் படம், முழுதுவமாக நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப்போடுகிறது.

செல்போனை பார்க்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத நபர்கள் கூட இந்த படத்தை பார்க்கும் போது தங்களது செல்போனை மறந்து முழு கவனத்தையும் திரையில் மட்டுமே வைக்கும் விதத்தில், படத்தின் ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யமாகவும், சிரிப்பு சரவெடியாகவும் இருப்பது படத்தின் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

இர்ண்டு மணி நேரம் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் ‘சத்திய சோதனை’ படத்தை பார்க்கலம்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.