2005-ல் தனுஷ், ப்ரியாமணி நடித்த ‘அது ஒரு கனாக்காலம்’ படத்துக்குப் பிறகு, இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில் ‘தலைமுறைகள்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் பாலுமகேந்திரா. இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்தப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலுமகேந்திராவின் வளர்ப்பு மகனான சக்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்காம் படித்துள்ள சக்தி மாணவ்ர்களுக்கு சினிமா தொழில்நுட்பம் குறித்து பாடமும் எடுத்து வருகிறாராம்.
ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திரா – இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த ‘தலைமுறைகள்’ படத்துக்கு சென்சார் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.