இயக்குனர் கௌதம் மேனனுக்கும் தனக்குமான சங்கடங்களை எல்லாம் மனம் திறந்து கொட்டித்தீர்த்த சூர்யா, துருவ நட்சத்திரத்தை தூக்கி தூரப்போட்டுவிட்டு லிங்குசாமியின் படத்திற்கு தயாராகிவிட்டார். படத்தில் சூர்யாவுக்கு இரண்டுவிதமான கெட்டப். அதனால் அழகாக தாடி வளர்த்து நந்தா படத்தில் இருந்ததைப்போல ஆளே மாற ஆரம்பித்திருக்கிறார் சூர்யா.
இதுபற்றி இயக்குனர் லிங்குசாமி சொல்லும்போது, “இந்தப்படத்தில் சூர்யாவுக்கு இரண்டுவிதமான கெட்டப். அதில் ஒரு கெட்டப்பில்தான் இப்போது சூர்யா தன்னை தயார்படுத்தி வருகிறார். நாங்கள் எதிர்பார்த்த அளவு அந்த கெட்டப் மாறியதும் உடனே படப்பிடிப்புக்கு கிளம்புகிறோம். அனேகமாக வரும் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்” என்கிறார்.
இந்தப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். தனது ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் லேட்டஸ்ட் தொழில் நுட்பங்களை பயன்படுத்திவரும் சந்தோஷ் சிவன் இந்தப்படத்தில் ரெட் ட்ராகன் எனப்படும் டிஜிட்டல் கேமராவை பயன்படுத்த இருக்கிறாராம். உலகத்திலேயே சினிமாவுக்காக இந்த கேமரா பயன்படுத்தப்படுவது இதுதான் முதல்முறையாம்.