‘சதுரங்க வேட்டை-2’வில் அரவிந்த்சாமி..!

217

aravind-swamy-1

கடந்த வருடம் மனோபாலா தயாரிப்பில் எச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை எந்த அளவுக்கு ஹிட்டானது என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.. நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் ‘சதுரங்கவேட்டை’ படத்தில் கூறியிருந்தார்கள்.

முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளை பற்றி விவரித்தது சதுரங்கவேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும் அதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.. தற்போது உண்மையாகியுள்ளது.

இந்தமுறை கிராமத்திற்கு பதிலாக நகரம் கதைக்களமாக மாறியுள்ளது. தினம் தினம் மெருகேறிவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதனை மிக தெளிவாகவும் விவரமாகவும் ‘சதுரங்கவேட்டை-2’ படத்தில் காட்டவுள்ளார்கள்.
இந்தப்பத்தில் அரவிந்த்சாமி, அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, மனோபாலவே இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். ஆனால் ஒரு சின்ன மாற்றம் என்னவென்றால் சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் மட்டுமே எழுதுகிறார். சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

Comments are closed.