பிரசாந்த் வர்மா- ஆர் கே டி ஸ்டுடியோஸ் (RKD Studios)- பூஜா கொல்லூரு- ஆகியோரின் கூட்டணியில் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் தயாரிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான படைப்பான ‘மகாகாளி- #MAHAKALI படத்தில் அக்ஷய் கண்ணா ‘சுக்ராச்சாரியார்’- SHUKRACHARYA அவதாரத்தில் தனது ‘போர் முழக்க’த்தை – ( WarCry) வெளிப்படுத்தும் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது
ஆர் கே டி ஸ்டுடியோஸ் – RKD Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.K துக்கல் மற்றும் பிரசாந்த் வர்மா ஆகியோர் இந்திய வரலாற்றுப் பின்னணியிலான மகாகாளி – MAHAKALI பிரம்மாண்ட படைப்பின் அறிமுக காணொளியை- Glimpse அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் ரசிகர்களின் நீண்ட காத்திருப்பும் நிறைவடைந்துள்ளது. பார்வையாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டிய இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பை தொடர்ந்து, ரசிகர்கள் அதன் அறிமுக காணொளிக்காக ஆவலுடன் காத்திருந்தனர். சுக்ராச்சாரியாரின் போர் முழக்கம் – SHUKRACHARYA’s WarCry என பெயரிடப்பட்டுள்ள இந்த அறிமுக காணொளியுடன் இந்த படம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான சாதாரண மோதலை விடவும்.. மிகப்பெரியதொரு முரண்பாட்டில் தெய்வீக சக்திகள் சிக்கிக் கொள்ளும் நிலையில், தர்மத்திற்கும்… அதர்மத்திற்கும்… இடையிலான ஒரு வலிமையான போருக்கான களத்தை இந்த காட்சிகள் அமைக்கிறது. அசுரர்களின் வலிமைமிக்க குருவான சுக்ராச்சாரியாரின் தலைமையில் நடைபெறும் இந்த போர்… ஒட்டுமொத்த உலகின் விதியை தீர்மானிக்கக்கூடிய ஒரு மாபெரும் போருக்கான அறிகுறியாக அமைகிறது. அச்சுறுத்தும் தொனி- வரவிருக்கும் மோதலின் வலிமையான காட்சிகளுடன், ‘முடிவு தொடங்குகிறது- The End Begins ‘ என்பதை உணர்த்தும் இந்த காட்சி… ‘மகாகாளி’ படத்தில் விரிவாக நிகழவிருக்கும் காவியப் போருக்கான அடித்தளத்தை பிரதிபலிக்கிறது.
இந்த காணொளியின் சிறப்பம்சமாக திகழ்வது… அக்ஷய் கண்ணா- சுக்ராச்சாரியாராக மற்றும் எளிதில் அடையாளம் காண இயலாத தோற்றத்தில் தோன்றுவது தான். தீவிரமான பார்வை- கம்பீரமான திரை ஆளுமையுடன் காணப்படும் அவர், இந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமான அடையாளத்தை அளிக்கிறார். அவரது ஃபர்ஸ்ட் லுக் ( First Look) ஏற்படுத்திய பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து… இந்த காணொளி… அவரது நடிப்பின் முதல் உண்மையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது. இது அந்த வலிமைமிக்க ஒரு அசுர குரு மற்றும் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான போரில் அவருடைய பங்களிப்பு குறித்த ஆர்வத்தை மேலும் கூடுதலாக்குகிறது.
பிரமிக்க வைக்கும் காட்சிகள்- விரிவான உலக உருவாக்கம்- ஈர்க்கக்கூடிய விஷுவல் எபெக்ட்ஸ் – ஆகியவை இணைந்து ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை உருவாக்கும் ‘மகாகாளி’யின் உலகத்தை… இந்த காணொளி முதன் முறையாக விரிவாக எடுத்துரைக்கிறது. இதில் ஸ்ரியா ரெட்டியும் வலிமையான தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பிரம்மாண்டமான சூழலையும்… நுணுக்கமான விவரங்களையும் வெளிப்படுத்தும் காட்சிகள்… தயாரிப்பாளர்கள் உருவாக்கிய அந்த பிரம்மாண்டமான உலகத்தை உணர்த்துவதுடன் கதையின் மீதான அவர்களின் ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன.
ஹனு -மேன் – Hanu-man திரைப்படம் – பிவிசியு – PVCU (பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ்) எனும் பிரம்மாண்டமான திரைப்பட பிரபஞ்சத்திற்கான அடித்தளத்தை அமைத்து, இந்திய இதிகாச கதைகளை திரையில் கண்கவர் அனுபவமாக மாற்றும் இயக்குநரின் அசாத்தியமான திறமையை நிரூபித்தது. அந்த பார்வையை இன்னும் பிரம்மாண்டமான மற்றும் லட்சியமிக்க அளவில் முன்னெடுத்துச் செல்ல ‘மகாகாளி- MAHAKALI’ தயாராகி வருகிறது. 2: 55 நிமிடங்கள் கொண்ட இந்த முன்னோட்ட காணொளி- பிரசாந்த் வர்மாவின் பரந்து விரிந்த திரைப்படப் பார்வையை நமக்கு அறிமுகப்படுத்துவதுடன்… கதைக்களம்- பிரம்மாண்டம் மற்றும் காட்சி அனுபவம் ஆகியவற்றில் தொடர்ந்து விரிவடையும் ஒரு மகா பிரபஞ்சத்தை பற்றியும் எடுத்துரைக்கிறது.
ஆர் கே டி ஸ்டுடியோஸ் RKD Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ஆர் கே துக்கல் வழங்குகிறார். இதனை இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லூரு இயக்குகிறார். இது பிரசாந்த் வர்மாவின் திரைப்பட பிரபஞ்சத்தின் அடுத்த படைப்பாக அமைகிறது. இப்படத்தில் அக்ஷய் கண்ணா, ஸ்ரியா ரெட்டி, பூமி ஷெட்டி, ரோஹித் ஷரஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர்கள்:
பூமி ஷெட்டி , அக்ஷய் கண்ணா, ஸ்ரியா ரெட்டி, ரோஹித் ஷரஃப், குஷ்பூ சுந்தர், ராகேஷ் பேடி , சமுத்திரக்கனி, ஜிதின் குலாட்டி, ரஜத் கபூர் ,முரளி சர்மா, நாசர், பப்லு பிருத்விராஜ் .
தொழில்நுட்பக் குழு :
படைப்பு : பிரசாந் வர்மா
இயக்கம் : பூஜா அபர்ணா கொல்லூரு தயாரிப்பு நிறுவனம் : ஆர் கே டி ஸ்டுடியோஸ்
வழங்குபவர் : ஆர் கே துக்கல் தயாரிப்பாளர் : ரிவாஸ் ரமேஷ் துக்கல் இசை: ஸ்மரன் சாய்
ஒளிப்பதிவு : சுரேஷ் ரஹடு
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஸ்ரீ நாகேந்திர தங்கலா
நிர்வாகத் தயாரிப்பாளர் : வெங்கட் குமார் ஜெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா
Comments are closed.