மீண்டும் இணைந்தது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ கூட்டணி

89

ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிகரமாக வளர்ந்துவரும் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சோதனைகள் ஏற்படவே செய்யும். அப்போது அவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுதி தங்களை நிரூபிக்க தயாராவார்கள். அந்த நேரத்தில் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்களையோ, அல்லது தான் ஹிட் கொடுத்து கைதூக்கிவிட்ட நடிகர்களையோ தேடிப்போவதும் சகஜமான நிகழ்வுதான்.

அப்படி ஒரு சூழ்நிலை இயக்குனர் ராஜேஸுக்கும் ஏற்பட்டுள்ளது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் ரிசல்ட் இதற்குமுன் அவர் கொடுத்த மூன்று ஹிட்டுகளின் வெற்றியையும் திரைபோட்டு மறைத்துள்ளது. எனவே மீண்டும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில்தான் நாம் சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டதுபோல ராஜேஸுக்கு கைகொடுக்க முன்வந்திருக்கிறார் ஆர்யா. தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ மூலம் புதிய படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை அவருக்கு அளித்திருக்கிறார் ஆர்யா.

மேலும் படத்தின் ஹீரோவாகவும் அவரே நடிக்கிறார். 2014 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்த படத்தில் ராஜேஸின் வலதுகரமான சந்தானமும் உடன் கைகோர்க்கிறார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மூலம் ஏற்கனவே ருசித்த வெற்றிபோல இன்னொரு வெற்றிக்கு தயாராகிவிட்டது இந்தக் கூட்டணி.

Leave A Reply

Your email address will not be published.