மெர்சல் டீமுக்கு வாய்ஸ் கொடுத்த ரஜினி…!

239

rajini 1 (1)

ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு திரைக்கு வந்தபின் அதில் உள்ள காட்சிகளை நீக்கச்சொல்வது எதேச்சதிகாரமான ஒன்று.. தாங்கள் கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக விஜய் கருத்து சொன்னதால், கோபமடைந்த பாஜக தான், இப்படி ஒரு மோசமான முன்னுதாரணத்தை உண்டாக்கியுள்ளது.. ஆனால் திரையுலகை சேர்ந்த பலரும் மெர்சல் படத்திற்கும் விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்..

இந்தநிலையில் ரஜினியிடம் இருந்து இதுபற்றி ஏதாவது கருத்து வெளிவராதா என பலரும் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே இந்தப்படத்தை பார்த்த ரஜினி `படத்தில் முக்கியமான விஷயம் பற்றி பேசியிருக்கிறார்கள்…. பாராட்டுகள்’ எனப் படக்குழுவினரை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார், இதன்மூலம் படத்தில் சொல்லப்பட்ட கருத்தில் எந்த தவறும் இல்லை என தனது வாய்ஸ் ஆக ரஜினி கூறியுள்ளதாகவே இது கருதப்படுகிறது.

Comments are closed.