ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்தின் பாடல்கள் மேக்கிங் வீடியோவை தொடர்ந்து அப்படத்தின் சிங்கள் ட்ராக் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி 23ஆம் தேதி இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விமரிசையாக நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ‘ஹே பேபி’ பாடல் எல்லோரையும், குறிப்பாக இளைய தலைமுறையினரை மிகவும் கவர்ந்துள்ளது. இந்தப்படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ இயக்கியுள்ளார்.
மு.விஜயகுமார்