கார்த்தி, ஹன்சிகா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ள பிரியாணி படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருக்கிறார். த்ரில் கலந்த காமெடியுடன் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இது யுவனுக்கு 100 ஆவது படம் ஆகும். இதன் ஆடியோ வெளியீட்டை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிட தீர்மானித்திருந்தார்கள். மேலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளும் வருகிறது.
அதனால் பிரியாணி படத்தின் பாடல்களை யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளன்று பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்து, இதற்காக ஒரு வித்தியாசமான டீஸரையும் வெளியிட்டிருந்தார் வெங்கட்பிரபு. விழாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை அழைக்கவும் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் ‘பிரியாணி’ படத்தின் அனைத்து பாடல்களையும் யாரோ ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டு விட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் இன்று பிரியாணி படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் முற்பகல் 11.30 மணியளவில் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு சென்று பாடல்களை இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுக்க இருக்கிறார்கள். ஆடியோ விழா நடத்தி பாடல்கள் வெளியாவதற்கு முன்பே அனைத்து பாடல்களும் இணையதளத்தில் லீக்கான சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மு.விஜயகுமார்
You have observed very interesting points!
ps decent internet site.Blog monetyze