நடனம் ஆடும்போது கீழே விழுந்தார் லாரன்ஸ் – சிகிச்சையுடன் இரண்டு மாதம் ஓய்வு

53

காஞ்சனா வெற்றிக்கு பிறகு லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் ‘முனி-3 கங்கா’. இந்த படத்தின் பாடல் காட்சி ஒத்திகையின் போது லாரன்ஸ் தடுமாறி கீழே விழுந்தார். லாரன்ஸ் நடனம் ஆடும் வேகம்தான் உங்களுக்கு தெரியுமே. கீழே விழுந்ததில் அவரது கழுத்து மற்றும் மணிக்கட்டுகளில் பலத்த அடிபட்டதால் உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருபது நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார் லாரன்ஸ்.

பலத்த அடிபட்டதால் மூன்று மாதங்களாவது லாரன்ஸிற்கு ஓய்வும், சிகிச்சையும் தேவை என டாக்டர்கள் கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள். அதனால் ஓய்வுக்கு பிறகு டிசம்பரில்தான் ‘கங்கா’ படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார் லாரன்ஸ். அதுவரை டாக்டர்கள் அவருக்கு வீட்டிலேயே பிஸியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து லாரன்ஸ் சொல்லும்போது “இரண்டாம் பாதியில் ரிஸ்க்கான காட்சிகள் அதிகம் இருப்பதால் தான் இரண்டு மாத ஓய்வு எடுக்கிறேன். நான் வணங்கும் எல்லாம்வல்ல ஸ்ரீ ராகவேந்திரர் மகிமையால விரைவில் குணமடைந்து விடுவேன்” என்கிறார் லாரன்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.