இன்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் மூன்று வருடங்களுக்கு முன் சுப்ரியா என்ற மும்பை பத்திரிகை நிருபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட விபரமெல்லாம் நீங்கள் அறிந்ததுதானே.. ஆனால் அவர் அப்பாவாகப்போகிறார் என்கிற விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..
தான் விரைவில் அப்பவாகப் போவது குறித்து நேற்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ். கடந்த வருடம் மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’, ‘மும்பை போலீஸ்’, ‘மெமோரீஸ்’ என மூன்று சூப்பர்ஹிட் படங்களை தந்த உற்சாகத்தில் இருக்கும் அவருக்கு இப்போது தான் தந்தையாகப்போகும் செய்தியும் சேர்ந்துகொள்ள சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்.?